ஜொப்ரா ஆர்ச்சர் உபாதையினால் பாதிப்பு

ஜொப்ரா ஆர்ச்சர் உபாதையினால் பாதிப்பு


இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்சர் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

முழக் கையில் ஏற்பட்டுள்ள உபாதையினால் இந்திய அணிக்கு எதிரான டுவன்ரி-20 போட்டித் தொடரிலும் பங்கேற்கக் கூடிய சாத்தியங்கள் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

உபாதை நிலைமை காரணமாக ஆர்ச்சர் அஹமதாபாத்தில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ச்சரின் உடல் நிலை குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாக அணியின் பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.

உபாதையின் நிலைமைகளை கண்காணித்து சத்திரசிகிச்சை மேற்கொள்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் எனவும், போட்டித் தொடர்களில் ஆர்ச்சரின் பங்களிப்பினை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது மதிப்பீடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles