” டங்கன் வைற்” பதக்கம் வென்ற ஜீலை 31 ல் தேசிய விளையாட்டு விழா!!

” டங்கன் வைற்” பதக்கம் வென்ற ஜீலை 31 ல் தேசிய விளையாட்டு விழா!!

ஆண்டுதோறும் ஜுலை மாதம் 31ஆம் திகதியை, தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியை வழங்கியுள்ளது.

முன்னதாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியை, தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்துவதற்கு 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

புதுவருட தயார்படுத்தல்கள் காரணமாக. குறித்த தினத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்க முடியாதென்பதால், அதனை பிறிதொரு தினத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, ஒலிம்பிக்கில் இலங்கை வீரர் டங்கன் வைட் 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில், வெள்ளிப்பதக்கத்தை வென்ற நாளான ஜுலை மாதம் 31ஆம் திகதியை, தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது

administrator

Related Articles