டாம் வீதியில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட பெண் இரத்தினபுரியை சேர்ந்தவராம்!!! பொலிஸார் தீவிர விசாரணை

டாம் வீதியில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட  பெண் இரத்தினபுரியை சேர்ந்தவராம்!!! பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு டாம் வீதியில் முதலாம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட பெண் இரத்தினபரி மாவட்டத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறுகின்றனர் .

இவர் குருவிட்ட பகுதியில் தேப்பானவா எனும் சிறிய ஊரிய சேர்ந்த 30 வயதான இளம்பெண் என பொவிஸ் தலைமையக பேச்சாளாரான அஜித் ரோகன கூறினார்.

இந்த கொலையை செய்த சந்தேக நபருக்கும் அவருக்கும் எவ்வாறான தொடர்பு இருந்தது என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஹங்கவெல்லையில் இருந்து 143 பஸ்ஸில் கொண்டு வரப்பட்டதால் அந்த பெண் ஹங்கவெலை பகுதியில் வேலை செய்பவரா? அல்லது கொலை செய்த நபரை பார்க்க வந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான, விடுமுறையிலிருந்த புத்தல பொலிஸ் நிலையத்தின் உப​ பொலிஸ் இன்ஸ்பெக்டரே அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித ரோஹன இதன்போது கூறினார்.

இந்த சம்பவம் டாம் வீதியில் மட்டுமல்ல ஏனைய பகுதிகளிலும் பரப்பரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடதக்கது.

அந்த cctv video

administrator

Related Articles