டாம் வீதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி தற்கொலை!!

டாம் வீதி கொலையுடன்  தொடர்புடைய சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி தற்கொலை!!

டாம் வீதியில் பரப்பரப்பை ஏற்படுத்திய கொலை சம்பந்தமாக தேடப்பட்டு வந்த புத்தல பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணிண் சடலம் மற்றும் சந்தேகநபர் தொடர்பான தகவல்களை பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது

இரத்தினபுரி − குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பகுதியை 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகன கூறினார்.

புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

ஹங்வெல்ல பகுதியிலுள்ள வாடி வீடொன்றிற்கு பெண்ணொருவருடன் கடந்த 28ம் திகதி செல்லும் குறித்த சந்தேகநபர், மார்ச் 01ம் திகதி சந்தேகநபர் மாத்திரம் பயணப் பையை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேறுயுள்ளதாகவும் விசாரணைகள் கண்டறியப்பட்டுள்ளது.

CCTV ஊடாக நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே சம்பவம் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த நபர் தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

administrator

Related Articles