டுவன்ரி-20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

டுவன்ரி-20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி


இங்கிலாந்து அணிக்கு எதிரான டுவன்ரி-20 போட்டித் தொடரை இந்திய அணி வெற்றிகொண்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற ஐந்தாவது டுவன்ரி-20 போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.

அஹமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றீட்டிய இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.


இதன்படி களமிறங்கிய இந்திய அணிய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணித் தலைவர் கொஹ்லி ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதில் டேவிட் மாலன் 68 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் ஷர்துல் தார்க்கூர் 3 விக்கட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். புவனேஸ்வர் குமார் நான்கு ஓவர்களில் 15 ஓட்டங்களை மட்டுமே கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி மூன்றுக்கு இரண்டு என்ற அடிப்படையில் இந்திய அணி இந்த தொடரை வென்றுள்ளது.

administrator

Related Articles