டெல்லி எல்லையில் தொடரும் போராட்டம் – 20 கி.மீ. தூரம் சாலையை நிரப்பிய விவசாயிகள்

டெல்லி எல்லையில் தொடரும் போராட்டம் – 20 கி.மீ. தூரம் சாலையை நிரப்பிய விவசாயிகள்

டெல்லி எல்லையில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு டிராக்டர்கள், ஜீப்கள் ஆகியவற்றுடன் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுங்குளிரிலும் போராட்டத்தை தொடரும் விவசாயிகளில் பெரும்பாலோர் முதியவர்கள் என்பதால், தினமும் உணவு சமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வந்துள்ளனர். கோரிக்கை முழக்கங்கள் ஒருபுறம் ஒலித்தாலும், மறுபுறத்தில் தினமும் சமையல் பணிகள் வழக்கமாக நடைபெற்று வருகிறது. 6 மாதங்களுக்கு தேவையான மாவு, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றை விவசாயிகள் எடுத்து வந்துள்ள நிலையில், போராட்டக்களத்தில் தினமும் தேநீர், லஸ்ஸி, பால், லட்டு உள்ளிட்ட பதார்த்தங்களும் விநியோகிக்கப்படுகின்றன.

இரவு நேரங்களில் விவசாயிகள் தங்குவதற்கு பிரத்யேக குடில்கள், செல்போன் சார்ஜ் செய்யும் பேட்டரிகள், தடையில்லாத குடிநீர், மருந்து பொருட்கள் அடங்கிய ஆம்புலன்ஸ்கள் என அனைத்து வசதியும் போராட்டக் களத்தில் இடம்பெற்றுள்ளன.

administrator

Related Articles