” டைகர் வூட்ஸ் சென்ற கார் விபத்து! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி !! (Video)

” டைகர் வூட்ஸ் சென்ற கார் விபத்து! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி !! (Video)

உலக புகழ்பெற்ற கோல்ப் வீரரான டைகர் வூட்ஸ் பயணம் செய்த கார் இன்று காலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிவ் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் புரண்டதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் டைகர் வூட்ஸ் பலத்த காயத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

45 வயதான டைகர் வூட்ஸ் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறிப்பாக அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

அத்துடன் அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக மேலதிக தகவல்களை தெரிவிக்க முடியாது என கூறினார்கள்.

விபத்து நடந்த போது அவரது காரில் யாரும் இருக்கவில்லை என்றும் தெரியவருகிறது.

அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகும் போது 80 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

administrator

Related Articles