டொரோன்டோவில் 18 மில்லியன் டொலர் பெறுமதியான போதை பொருட்களுடன் போதை மன்னன் “டேனியேல்” கைது!

டொரோன்டோவில் 18 மில்லியன் டொலர் பெறுமதியான போதை பொருட்களுடன் போதை மன்னன் “டேனியேல்” கைது!

ஓன்றாரியோ மாகணத்தின் கேந்திர நகரமான டொரோன்டோவில் 18 மில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான போதைப்பொருட்களை வைத்திருந்த பிரபல போதைப்பொருள் விற்பனை மன்னனான நோர்த் யோர்க்கை சேர்ந்த 45. வயதான டேனியல் டுபாஜோவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் முழுவதும் இந்த செயற்திட்டம் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக பிரதம பொலிஸ் சூப்ரிடனட் டொமினிக் சின்னபொலி கூறினார்.

சந்தேகநபிடம் இருந்து 65 ஆயுதங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்ய 22 பேர் கொண்ட குழுவொன்று ஈடுப்பட்டது.அவர்களுக்கு விசேட நன்றிகளை தெரிவித்த சின்ன பொலி

கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த வேட்டையின் போது கைபற்றபட்ட ஆயுதங்களில் 54 கை துப்பாக்கிகள் என்றும் அதற்காக பயன்படுத்த வைத்திருந்த 15 ஆயிரம் ரவைகளையும் மீட்டதாக இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட டேனியலுக்கு எதிராக 70 ற்கும் மேற்பட்ட போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவரிடம் மீட்கப்பட்ட போதைப்பொருட்களில் ஹெரோயின், கிறிஸ்டல் மெத், பென்டனியல் இருந்தாக பொலிசார் கூறினார்கள். எதிர்வரும் 7 ஆம் திகதி இவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

இவருடன் தொடர்புடைய பலரை ரகசியமாக பொலிசார் தேடி வருவதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

administrator

Related Articles