டொரோன்டோ களஞ்சிய அறைக்குள் பிறந்த நாள் பார்ட்டி !! பொலிசார் வழக்கு பதிவு!

டொரோன்டோ களஞ்சிய அறைக்குள் பிறந்த நாள் பார்ட்டி !! பொலிசார் வழக்கு பதிவு!

கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து ஒன்றாரியோ மாகணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாகண அரசு அமுல்படுத்தி இருந்தது.

ஆனால் அதனையும் மீறி டொரோன்டோ நோர்த் யோர்க் பகுதியிலுள்ள தனியார் களஞ்சியசாலையின் அறையொன்றை வாடகைக்கு எடுத்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

இந்த பிறந்த நாள் விழாவில் சுமார் 100 பேர் கலந்து கொண்டதாக பொலிசார் கூறுகின்றனர். இது தொடர்பாக தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அந்த களஞ்சிய சாலையை முற்றுகையிட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.

இவர்கள் அனைவருக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது.

ஒன்றாரியோ மாகணத்தில் உள்ளக இடமொன்றில் 10 பேர் வரையே கொண்டாட்டம் மேற்கொள்ள முடியும். அதனை மீறி களியாட்டத்தை ஏற்பாடு செய்வோருக்கு எதிராக ஆக கூடுதலாக 10 ஆயிரம் கனேடிய டொலர்களை அபராதமாக விதிக்க முடியும்.

அத்துடன் களியாட்டங்களில். பங்குபெறும் நபர்களுக்கு தலா 750 கனேடிய டொலர்களை அபராதமாக விதிக்க முடியும் என பொலிசார் கூறினர்

administrator

Related Articles