சமூக வலைத்தளம் மூலம் பெண்களை ஏமாற்றி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை!

சமூக வலைத்தளம் மூலம் பெண்களை ஏமாற்றி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை!

தகாஹிரோ ஷிரைஷி (Takahiro Shiraishi) என்னும் அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக தகவல் பதிவிடும் பெண்களை சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்டு, தான் அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இதனை நம்பி வரும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த ஷிரைஷி, அவர்களது உடல்களை துண்டு துண்டாக வெட்டி தன் வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.

ஷிரைஷி முதல் முறையாக ஒரு பெண்ணை கொலை செய்த போது அதனை கண்டுபிடித்த ஒரு ஆணும் ஷிரைஷியால் கொல்லப்பட்டுள்ளார்.

காணாமல் போன ஒரு பெண்ணுக்கும், ஷிரைஷிக்கும் நடந்த ட்விட்டர் உரையாடல்களை அந்தப் பெண்ணின் சகோதரர் கண்டுபிடித்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியில் வந்தன. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ஷிரைஷிக்கு நேற்று மரண தண்டனை விதித்து டோக்கியோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

administrator

Related Articles