தசுனின் சாணக்கிய ஆட்டம் ! தம்புள்ள அணி DLS முறையில் 4 ஓட்டங்களால் வெற்றி!!

தசுனின் சாணக்கிய ஆட்டம் ! தம்புள்ள அணி DLS முறையில் 4 ஓட்டங்களால் வெற்றி!!

கண்டி டஸ்கர்ஸ் அணிக்கெதிராக இன்று தம்புள்ள விக்கிங்ஸ் அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி டக்வார்த் லூயிஸ் முறையில் 4 ஓட்டங்களால் வெற்றீட்டியது.

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைப்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது

ஆரம்பத்தில் ஒசாட பெர்ணான்டோ உபாதையானார் அதன் பிறகு நீரோசன் திக்வெல்ல அதிரடியாக ஆடினார், ஆனால் அவரால் நீண்ட நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை , அடுத்தாக உபுல் தரங்கவும் அணியை நடுவில விட்டு பெவிலியன் திரும்பினார்.

ஆனால் அனைவரும் எதிர்பார்க்காத வேளையில் ஆட்டத்தை மாற்றினார் அணித் தலைவர் தசுன் சாணக்க அவர் சமிட் பட்டேலுடன் இணைந்து அதிராடியாக ஆடினார்.

இருவரும் ஒன்றினைந்து நான்காவது விக்கெட்டுக்காக 127 ஓட்டங்களை பெற்றதுடன் இருவரும் அரை சதங்களை குவித்தனர்.

தசுன் சாணக்க 4 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகளுடன் 37 பந்துகளுக்கு 73 ஓட்டங்களை பெற்றார். பட்டேல் 58 ஓட்டங்களை பெற்றதுடன் அணியை 20. ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்களை பெற துணை நின்றார்.

வெற்றி இலக்கான 196 ஓட்டங்களை பெற கண்டி டஸ்கர்ஸ் அணி ஆடுகளம் வந்த நேரம் மழை பெய்யவும் ரெடியாகி விட்டது.

கிடைத்த கொஞ்ச ஓவரில் வேகமாக ஆடி டக்வர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெறலாம் என கண்டி அணி நினைத்தது .

அவர்களுக்கு நான்கு ஓட்டங்கள் தேவையாக இருந்த வேளை மழை பெரிதாக பெய்ய ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.

அந்நேரம் கண்டி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களை பெற்று இருந்தது இதில் குசல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்று இருந்தார்.

ஆட்டநாயகனாக தசுன் தெரிவு செய்யப்பட்டார்

administrator

Related Articles