வாய்தர்க்கம் முற்றியதால் தந்தையை கொன்று நன்றி கடன் செலுத்திய மகன்,நாவலப்பிட்டியில் கொடுரடம்,(அதிர வைக்கும் படங்கள்)

வாய்தர்க்கம் முற்றியதால் தந்தையை கொன்று நன்றி கடன் செலுத்திய மகன்,நாவலப்பிட்டியில் கொடுரடம்,(அதிர வைக்கும் படங்கள்)

நாவலப்பிட்டி பகுதியில் தந்தையொருவரை, கத்தியால் குத்தி கொலை செய்த, மகனை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாவலப்பிட்டி – கொலிகுரூப் தோட்டத்தைச் சேர்ந்த 71 வயதான சரவணமுத்து மகாமுணி என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் இருந்த மகனுக்கும், தந்தைக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்த வாக்குவாதம் மோதலாக மாறியுள்ள நிலையிலேயே, மகன், தந்தையை கத்தியால் குத்தியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து, மகன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

administrator

Related Articles