தனஞ்செய ஹற்றிக் ! போலர்ட் 6 பந்தில் 6 சிக்ஸர்கள்! முதல் T20 போட்டியில் 4 விக்கெட்டுகளால் வென்றது மேற்கிந்திய தீவுகள் !!

தனஞ்செய ஹற்றிக் ! போலர்ட்  6 பந்தில் 6 சிக்ஸர்கள்! முதல் T20 போட்டியில் 4 விக்கெட்டுகளால்  வென்றது மேற்கிந்திய தீவுகள் !!

மேற்கிந்திய தீவுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது T20 போட்டியில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் போலராட் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.

வழமை போல இலங்கை அணி இந்த முறையும் சொதப்பியது. டெஸ்ட் மேட்ச்சில் விளையாடுவது போன்று திக்வெல்லவின் ஆட்டம் இருந்தது.

அவர்  மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகபந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறினார். அவர் கொஞ்சம் அக்கறையோடு ஆடி இருந்தால் இலங்கை அணி நிலைமை வேற லெவல். அவர் 29 பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்றார்.


இன்று தனது முதல் போட்டியில் விளையாடிய நிசாங்க பார்ப்பவர்களை மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் 39 ஓட்டங்களை பெற்றார்.

அவர் ஆட்டமிழந்தும் அஞ்சலோ மெத்யூஸ் களத்திற்கு வந்தார் அந்த பக்கம் சந்திமால் அட இவங்களாவது சாத்துவாங்க என்று நினைச்சா வந்ந வழியில போனாங்க அப்போது மழை வேற பெய்ந்தது.

கொஞ்ச நேரம் ஆட்டம் தடைப்பட்டது. பிறகு என்ன இலங்கை அணியின் வீரர்கள் வழமை போல வந்தாங்க போனாங்க. பந்தை வீச்சில் மெக்கோய் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு போதுமா? அவங்க ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் வந்து முதல் ஓவரிலே மெத்தியூஸ்க்கு சிக்ஸர் மூலமா விருந்து கொடுத்தாங்க

3.1 ஓவரிலே 52 ஓட்டங்களை பெற்றாங்க அந்தநேரம் பந்து வீசியவர் ஓப் ஸ்பினரான தனஞ்செய அவர் இரண்பாவது பந்தை வீசினாரு பாருங்க.

அதை அப்படியே தூக்கி அடிச்ச லுவிஸ் குணத்திலக்க விடம் பிடி கொடுத்து அவுட் ஆனாரு. அதன் பிறகு வந்தவரு கிரிக்கெட் தாத்தா கிறிஸ் கெய்ல்ஸ் அவர் தனஞ்செய வீசின மூன்றாவது பந்துக்கு ஆட்டமிழந்தாரு.

பிறகு ஹற்றிக் பந்து ஆட வந்தவர் பூரான் , அவரு தனஞ்செய வீசுன பந்தை திக்வெல்ல கையில கொடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியே குசியில் இருந்தது

அப்புறமா வந்தவரு மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் போலராட் அவரது விக்கெட்டை கைப்பற்றும் நோக்கத்தில தனஞ்செயவை நம்பி பந்தை கொடுத்தாரு மத்தியூஸ் .

ஆனால் அவர் வீசின அந்த ஓவருக்கு 6 × 6 சிக்ஸர் அடித்து கிப்ஸ் , யூவராஜ் சிங் சாதனையோடு இணைந்தார்.

இனி என்ன 13.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்தீய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் தனஞ்செய 62 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் ஹசரங்க 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சொதப்பாமல் இருந்து இருந்தால்…. அடுத்த மெட்சில் சந்திப்போம்

administrator

Related Articles