“தமிழன் இல்லா” யாழ் அணியின் வெறியாட்டம்! கண்டி அணியோ தடுமாற்றம்!

“தமிழன் இல்லா” யாழ் அணியின் வெறியாட்டம்! கண்டி அணியோ தடுமாற்றம்!

ஹம்பந்தோட்டையில் இன்று முடிவடைந்த 8 வது LPL பிரிமியர் லீக் போட்டியில் யாழ் ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களாவ் கண்டி அணியை தோற்கடித்தது.

அது மட்டுமல்ல விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளோடு பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது

யாழ் அணியின் தலைவர் திசிர பெரேராவின் வெறியாட்டம் கண்டி அணிக்கு நெருக்கடியே தந்தது என்று சொல்லலாம்.

நாணய சுழற்சியிவ் வென்ற யாழ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இன்றும் அவர்கள் தமது குழாமில் இருக்கும் இளம் தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமை தமிழ் விளையாட்டு ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் .

ஏனெனில் அந்த அணியின் உரிமையாளர் தமிழராக இருந்தும் இந்த நிஸை ஏன் ஏற்பட்டது என்பது நமக்கு புரியவில்லை. கேள்வி கேட்டால் திறமையின் அடிப்படையிலும் கள நிலவரங்கள் படியுமே அணியை தெரிவு செய்தோம் என்று நச்சின்னு பதிலை சொல்லி விடுவாங்க.

அதனால் கொரோனா பேஸ் மாஸ்க் போட்டவங்க மாதிரி வாயை மூடி பேசுவோம்.

இனி ஆட்டத்தை அலசுவோம்.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது.

ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 49 ஓட்டங்களை பெற்றிருந்த யாழ் அணியை அணித்தலைவர் திசர பெரேரராவும் தனஞ்சய டி சில்வாவும் இணைந்த அருமையாக ஆடி அணியின் ஓட்டத்தை 17 வது ஓவர் வரை கொண்டு சென்றனர் அந்நேரம் அணியின் ஓட்டங்கள் 167 இருந்தது.

அப்போது திசிர பெரேரா 68 ஓட்டங்களை ( 28 பந்துகள் 5. சிக்ஸர்.5 பவுண்டரி) ஆட்டமிழக்கிறார் அவர் இழந்த அடுத்த கணமே தனஞ்செய டி சில்வா 61 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கிறார்.

எப்படியோ இறுதி ஆட்டக்கார்கள் பந்துகளை விலாசி மொத்தமாக ஓட்ட எண்ணிக்கையை 185 வரை கொண்டு சென்றனர்.

பதிலுக்கு கண்டி டஸ்கர்ஸ் அணி இலகுவாக வெற்றி பெறும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் திசிர பெரேராவின் கள தடுப்பு, பந்து வீச்சு மற்றும் அணியை வழி நடத்திய முறையை எதிர்நோக்க முடியாமல் இடைவேளை இன்றி வீரர்களையும் 17. 1 ஓவர்களில் இழந்து 131ஓட்டங்களை மட்டுமே பெற்றது. .

இதில் ஸிம்பாவே வீரரான பிரண்டன் டெய்லர் மட்டுமே சிறப்பாக ஆடினார் அவர் பெற்ற ஓட்டம் 46

பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகனாக தெரிவினார்.

.

administrator

Related Articles