தமிழர்களின் பிரச்சினையை ஒஸ்லோவில் அல்ல இலங்கையில் பேச வேண்டும்!! அத்தாவுல்லா

தமிழர்களின் பிரச்சினையை ஒஸ்லோவில் அல்ல  இலங்கையில் பேச வேண்டும்!! அத்தாவுல்லா

மாளிகைக்காடு நிருபர் – நூருல் ஹுதா உமர்

ஜனாஸா எரிப்பை நிறுத்த கோரி கரையான்கள் மழை தேடி தூதூ போனது போன்றவர்கள் சென்றால் எப்படி தீர்வு கிடைக்கும். பாராளுமன்றத்தில் அந்த வர்த்தமானி அறிவிப்பின் பிழையை பகிரங்கமாக சுட்டிக்காட்டி வாபஸ் பெற கோரினோம். தனிநபர் பிரேரணைக்கு தயாரானோம். ஆனால் இப்போது எங்களுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. பொதுமக்களை அங்குமிங்கும் அலைக்காமல் ஒவ்வொரு வைத்தியசாலையிலும் கொரோனா கட்டுப்பாட்டு தடுப்பு பகுதியை உருவாக்க வேண்டும். நாம் குறுகிய ஆயுளை கொண்டவர்கள். எமது எதிர்கால சந்ததியினருக்கு சரியான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான தேசியகாங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

சனிக்கிழமை (28) மாலை சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அவர்,

எமது நாட்டில் வாழும் 30 வீத சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை 70 வீதம் வாழும் பெரும்பான்மை மக்களுடன் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு எங்கங்கையோ பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் அரசியல் செய்ய கூடாது. எமது மக்களின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளையே நாம் பேசி முடிவை பெற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்களின் பிரச்சினைகளை பேசவேண்டிய இடம் ஒஸ்லோ அல்ல இலங்கையே. அண்மையில் இந்த நாட்டின் முக்கிய பௌத்த மதகுருக்களை சந்தித்து இந்த நாடு தொடர்பில் முஸ்லிங்களாகிய எங்களின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூறினோம். முஸ்லிம் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் கிழக்குவாசல் தொலைக்காட்சியின் நெம்புகை நிகழ்ச்சியில் தெளிவாக சொன்னோம்.

நிலக்கீழ் நீரில் வைரஸ் கலக்குமா என்பதையும் இறந்த உடல்களில் இருந்து வைரஸ் வெளியாகுமா என்பதையும் ஆராயுங்கள் அதன் பின்னர் எங்களுக்கு உடனடியாக தீர்வை வழங்குங்கள் என்று அன்றே கேட்டுக்கொண்டோம். உலக வைரஸ் தொடர்பிலான தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் ஒரு அறிக்கையை தர எமது நாட்டின் நிபுணர்கள் வேறுவிதமாக பேசிக்கொண்டிருந்தார்கள். சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸவிதாரண எனது பக்கத்து ஆசனத்தில் இருப்பவர் அவர் வைரஸ் தொடர்பில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர். இது தொடர்பில் அவரிடம் பல கலந்துரையாடல்களை செய்துள்ளேன்.

கிழக்கில் கல்முனை வைத்தியசாலையில் 02 ஜனாஸாக்களும், காத்தான்குடி வைத்தியசாலையில் 02 ஜனாஸாக்களும் அடங்கலாக நாடுமுழுவதிலும் ஜனாஸாக்கள் குளிரூட்டியில் இருக்கிறது எனும் விடயம் எனக்கு மக்களின் பிரதிநிதியாக பலத்தை சங்கடத்தை தந்தது. இவ்விடயம் தொடர்பில் எமது மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சட்டத்தரணிகளை அணுகி இவ்விடயத்தை கடுமையாக ஆலோசனை செய்து வந்தேன். கோரோனோ தொற்றினால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்யும் வர்த்தமானியை வெளியிட வேண்டிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையின் தலைவர் எமக்கு பக்கத்தில் இருக்கும் போது அவர்களை அணுகியே நாம் தீர்வை பெறவேண்டும். ஒரு பிரச்சினையை தீர்க்க பலவழிகள் இருக்கிறது. அதில் இலகுவான, விரைவான வழியையே நாம் தெரிவுசெய்ய வேண்டும்.

ஜனாஸா எரிப்பை நிறுத்த கோரி ‘கரையான்கள் மழை தேடி தூதூ போனது” போன்றவர்கள் சென்றால் எப்படி தீர்வு கிடைக்கும். பாராளுமன்றத்தில் அந்த வர்த்தமானி அறிவிப்பின் பிழையை பகிரங்கமாக சுட்டிக்காட்டி வாபஸ் பெற கோரினோம். தனிநபர் பிரேரணைக்கும் தயாரானோம். ஆனால் இப்போது எங்களுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. பொதுமக்களை அங்குமிங்கும் அலைக்காமல் ஒவ்வொரு வைத்தியசாலையிலும் கொரோனா கட்டுப்பாட்டு தடுப்பு பகுதியை உருவாக்க வேண்டும். நாம் குறுகிய ஆயுளை கொண்டவர்கள். எமது எதிர்கால சந்ததியினருக்கு சரியான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

பாகிஸ்தானிய பிரதமரை சந்திக்க என்னையும் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அழைத்தார்கள். ஆனால் கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதியளவில் நல்லடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பிலான கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்கள் நடைபெற்று தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்ததனாலும், வர்த்தமானி அறிவிப்பை வெளியிட காகிதாதிய வேலைகள் மட்டுமே இன்னும் மிச்சமாக இருந்ததனாலும் அந்த வேலைகளை நானே முன்னின்று செய்துகொண்டிருந்ததனால் அந்த சந்திப்பில் கலந்துகொள்ள வில்லை. பாகிஸ்தானிய பிரதமரின் சந்திப்பில் அண்மைய நாடுகளின் பல தசாப்த பிரச்சினைகள் பற்றி பேச வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கிறது என்றார்.

administrator

Related Articles