தலைமன்னாரில் புகையிரதம் – பேரூந்து நேருக்கு நேர் மோதல், 9 வயது சிறுவன் பலி, 15 பேர் வைத்தியசாலையில்

தலைமன்னாரில் புகையிரதம் – பேரூந்து நேருக்கு நேர் மோதல், 9 வயது சிறுவன் பலி, 15 பேர் வைத்தியசாலையில்

தலைமன்னாரில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி
விபத்திற்குள்ளானதில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைமன்னார் – பியர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

………………………………………………….UP DATE………………………………………………………………..

கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து மோதியதில் பலர் படுகாயம் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த தனியார் பேரூந்து கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம் அடைந்துள்ளதுடன் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்ற  நிலையில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல் :மன்னார் லம்பேர்ட்

administrator

Related Articles