தலைமன்னாரில் புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனின் இறுதி கிரிகையில் கண்ணீர் மழை (படங்கள்)

தலைமன்னாரில் புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனின் இறுதி கிரிகையில் கண்ணீர் மழை (படங்கள்)

தலைமன்னார் பியர்  பகுதியில் நேற்று (17) மதியம்    தனியார் பேரூந்தும்  புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த   பாலசந்திரன் தருண் (வயது-14)  என்ற மாணவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவனின் இல்லத்தில் இன்று (17)  அஞ்சலி இடம் பெற்றது.

குறித்த மாணவனின் உடலுக்கு  பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக சிறுவனின் உடலுக்கு  தலைமன்னார் பகுதி மக்கள் தலைமன்னார் பாடசாலை மாணவர்கள் அரசியல் பிரமுகர்கள் அரச ஊழியர்கள்  என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சிறுவனின் உடல் பொது மக்களின் அஞ்சலியின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதே வேளை விபத்திற்கு உள்ளான தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் குறித்த புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோர் நேற்று (17) மாலை தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த இருவரையும் எதிர் வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles