“தல” அஜித்தின் வலிமை பட update!!

“தல” அஜித்தின் வலிமை  பட update!!

அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்தது.

தற்போது அந்தக் காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இதற்காக ஏப்ரலில் வெளிநாடு செல்வார்கள் எனத் தெரிகிறது.

வலிமை’ படத்தில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்களோ ‘வலிமை’ அப்டேட்டுக்காக பல்வேறு வழிகளில் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், படக்குழுவினரோ எதற்கும் அசரவில்லை.

தற்போது முதன்முறையாக ‘வலிமை’ அப்டேட் குறித்த தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மே 1-ம் தேதி அஜித் தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினத்தில் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

வலிமை’ படக்குழுவினரின் இந்த அறிவிப்பு, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

administrator

Related Articles