திங்கள் முதல் டொரோன்டோ மற்றும் பீல் நகரங்களுக்கு புதிய கட்டுபாடுகள்!!

திங்கள் முதல் டொரோன்டோ மற்றும் பீல் நகரங்களுக்கு புதிய கட்டுபாடுகள்!!

ஒன்றாரியோ மாகணத்தின் முக்கிய நகரங்களான டொரோன்டோ மற்றும் பீல் நகரங்களில் கொரோனா அதிகளவு பரவுகிறது. இதனால் அந்த பகுதிக்கு உடனடியாக ” கபில” நிறம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நகரங்களில் பல்வேறு தடுப்பு நடைமுறைகள் இருந்த போதிலும் நோய் பரவல் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை .

இதனால் மாகண முதல்வர் டக் போர்ட் புதிய நடைமுறைகளை எதிர்வரும் திங்கள் ( நவம்பர் 23) அமுல்படுத்த போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கமைய சலூன்கள் , உடற்பயிற்சி கூடங்கள் முழுமையாக மூடப்படும். அத்துடன் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் கட்டுப்படுத்தப்படும். பொருட்கள் தேவையானவர்கள் கடைக்கு வெளியே இருந்து எடுத்து செல்ல முடியும் .

அதேவேளை அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் சூப்பர் மார்க்கட்டுகள் , பாமசிகள் , ஹார்ட்வெயார்கள் வழமை போல திறந்திருக்கும்.

மேலும் சமூக ஒன்று கூடல்கள் முழுமையாக நிறுத்தப்படூகிறது வீட்டிற்குள்ளே விருந்தாளிகளை அழைத்து உள்ளேயோ வெளியேயோ உணவு பகிர்தல் கூடாது.

புதிய நடைமுறைகள்

  1. திருமணம்,மரணசடங்கு, சமயவழிப்பாடுகள் உள்ளே/ வெளியே 10 பேருக்கு மட்டுமே அனுமதி
  2. பலசரக்கு சூப்பர் மார்க்கட்டுகள் உள்ளே 50 வீதமானோருக்கு ஒரு தடவை செல்ல முடியும்.
  3. ரெஸ்டுரண்டுகள், பார்கள், உணவு மற்றும் குடிவகைகளை விற்கும் சகல இடங்களிலும் இனி உள்ளே எதையும் சாப்பிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். டிலிவரி முறை மட்டுமே அமுலில் இருக்கும்
administrator

Related Articles