திசை பார்த்து விலாசிய திசிர!யாழ் அணி 66 ஓட்டங்களால் வெற்றி! இன்றும் தமிழருக்கு இடமில்லை!

திசை பார்த்து விலாசிய திசிர!யாழ் அணி 66 ஓட்டங்களால் வெற்றி! இன்றும் தமிழருக்கு இடமில்லை!

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைப்பெற்ற LPL போட்டியில் யாழ் ஸ்டேலேயின்ஸ் அணி 66 ஓட்டங்களால் வெற்றி ஈட்டியதுடன் புள்ளிகள் பட்டியலில் 12புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தம்புள்ள வைக்கின்ஸ் பெரிசா எதையோ சாதிக்க போற மாதிரி யாழ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

அவங்க கணிப்பு சரியானது போல முதல் நான்கு விக்கெட்டுகளும் கண்ணை மூடி திறக்க முன் மள மளவென்று விழுந்தது. ஒரு கட்டத்தல் திசை தெரியாமல் போன யாழ் அணிக்கு திசை காட்டும் வகையில் வந்தார் அணித்தலைவர் திசேர பெரேரா. தமிழ் படத்தில வில்லங்களை விலாசி தள்ளுற மாதிரி ஆள் அடிச்சாரு பாருங்க.

திரும்பின இடமெல்லாம் சிக்ஸரும் பவுண்டரிகளும் பார்க்க முடிந்தது. குறிப்பா வேகபந்து வீச்சாளர் லாகிரு குமாரவை சுமார் மூஞ்சி குமாரவ ஆக்கிட்டாரு அவருக்கு விழுந்த அடியை வீடியோவில் பாருங்க

https://youtu.be/rb3M1vTi7Rk

அவர் 44 பந்துகளில் 7 சிக்ஸர் 8 பவுண்டரிகளோடு 97 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றது மாத்திரமல்ல அணியின் எண்ணிக்கையை 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் பெற வைத்தார்

என்ன செய்ய இந்த அணியில் தமிழ் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது கொஞ்சம் மனசுக்கு கஷ்டம் தான். ஆனால் இது விளையாட்டு ஆச்சே என்று அமைதியாக இருக்கவும் மனசு கேட்குது இல்லை.

சரி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி கொஞ்சம் கூட ஈடுப்பாடு இல்லாமல் விளையாடினது போலவே இருந்தது. வழமை போல தசுன் சாணக்க மற்றும் பட்டேல் ஆகியோர் மட்டுமே மனதிற்கு ஆறுதலாக விளையாடினாங்க அவுங்க முறையே 35 மற்றும் 41 ஓட்டங்களை பெற்றாங்க.

அதன்படி 19.1 ஓவர்களில் தம்புள்ளை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து பெற்ற ஓட்டம் 152 பந்துவீச்சில் உஸ்மன் சின்வாரி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

administrator

Related Articles