” மாய நோய்” காரணமாக தீடிரென நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கம் ! 170 வைத்தியசாலையில்

” மாய நோய்”  காரணமாக தீடிரென நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கம் ! 170  வைத்தியசாலையில்

ஆந்திர மாநிலம் கோதாவரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் திடீரென மயக்கமடைந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் மயங்கி விழுந்தது குறித்து வைத்தியர்கள் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றனர். ஏனெனில் மயங்கி விழுந்த பலரை சோதித்த போது அவர்கள் நல்ல உடல் நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் உள்ளிட்ட பத்து கிராமங்களில் நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மயக்கமடைந்தனர்.

மயக்கத்திற்கான காரணம் கண்டறியப்படாததால் சுகாதாரத்துறையினர் முகாம்கள் அமைத்து வீடு வீடாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். ஒரு சிலருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாத நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பலர் இது தெய்வ குற்றம் என சொல்வதாக சிலர் கூறுகிறார்கள்

administrator

Related Articles