திருகோணமலையில் பலத்த காற்றுடன் மழை!! ( video)

திருகோணமலையில் பலத்த காற்றுடன் மழை!! ( video)

ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா நிருபர்

வளிமண்டல திணைக்களத்தினால் வங்காள விரிகுடா கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் புயலாக மாறும் சாத்தியம் காணப்படுவதாகவும் 24 மணித்தியாலங்களுக்குள் புயல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

திருகோணமலை மாவட்டத்தை அண்மித்த சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் தாழமுக்கம் காணப்படுவதாகவும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது

திருகோணமலை மாவட்ட மீனவர்
கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை , கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாக கடற் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்

திருகோணமலை மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் மழை பெய்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது

கடற்பிரதேசங்களில் காற்று வீசுகின்ற போதும் தரை பிரதேசங்களில் காற்றின் வேகம் குறைவாகவே காணப்படுகின்றது

திருகோணமலை மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும், கிராம உத்தியோகத்தர் ஊடாக பாதுகாப்பு முன்னேற்பாடு, அவ்வப்போது பொதுமக்களுக்கு புயல் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றது

புயலானது இன்று மாலை அளவில் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

administrator

Related Articles