தில்ஷானின் அபார ஆட்டம், வென்றது இலங்கை லெஜன்ட்ஸ்

தில்ஷானின் அபார ஆட்டம், வென்றது இலங்கை லெஜன்ட்ஸ்


இலங்கை மற்றும் இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான டுவன்ரி-20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் ராய்பூரில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை லெஜன்;ட்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணி ஆரம்ப முதலே இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாது திணறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுகளை இழந்து 78 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதில் கிறிஸ் ட்ரிம்லெட் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் அணித் தலைவர் தில்ஷான் 6 ஓட்டங்களை மட்டும் கொடுத்து நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி 7.3 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் அணித் தலைவர் தில்ஷான் 26 பந்துகளில் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் மொன்டி பென்சர் 26 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக தில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

றோட் சேப்டி போட்டித் தொடரின் புள்ளிப் பட்டியலில் இலங்கை முதனிலை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles