“தில்” இருந்தால் வாருங்கள், விதுர கூட்டமைப்பினருக்கு அழைப்பு

“தில்” இருந்தால் வாருங்கள், விதுர கூட்டமைப்பினருக்கு அழைப்பு

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

நேற்று (24) பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இது தொடர்பாக சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை ஒன்றை முன்வைத்தார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட விடயத்தை கூறினார்.

தொல்பொருள் விடயம் தனிப்பட்ட மதத்திற்கோ, இனத்திற்கோ சொந்தமானதல்ல எனவும் அவர் கூறினார்.

administrator

Related Articles