தீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்!

தீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்!

‘எல்.கே.ஜி’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகிவந்த நிலையில், வரும் தீபாவளி அன்று ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கரோனா காரணமாக, இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி+ ஹாஸ்டார், ஜீ5 ஆகிய தளங்கள் புதிய படங்களை வாங்கி நேரடியாக ரிலீஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

administrator

Related Articles