தீபாவளி அன்று ‘மாஸ்டர்’ டீஸர்

தீபாவளி அன்று ‘மாஸ்டர்’ டீஸர்

‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் வெளியீடு குறித்த அதிகாரபூர்வத் தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து ‘மாஸ்டர்’ பின்வாங்கியது.

திரையரங்குகள் திறக்கப்பட்டு இருப்பதால், 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘மாஸ்டர்’ வெளியாகும் எனத் தெரிகிறது. பாடல்கள் வெளியாகிவிட்டாலும், டீஸர் உள்ளிட்ட எதையுமே படக்குழு வெளியிடவில்லை. பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு இருப்பதால், தீபாவளிக்கு டீஸரை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 12) காலையில் ‘மாஸ்டர்’ அப்டேட் மாலை 6 மணிக்கு என்று படக்குழுவினர் அறிவித்தார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள். அதன்படி, ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த அப்டேட்டுக்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

administrator

Related Articles