தீப்பெட்டி கணேசனின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி!!

தீப்பெட்டி கணேசனின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி!!

ரேனக குண்டா , பில்லா 2 உட்பட ஏராளமான படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்.

கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் சுகவீனம் காரணமாக சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆயினும் அவரது நிலைமை மோசமானதாகவும் பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அன்னாரின் மறைவிற்கு இயக்குனர் சீனு ராமசாமி தனது அனுதாபத்தை டூவிட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை
இதய அஞ்சலி கணேசா..”

அதேபோன்று சோலை ஆறுமுகன் உட்பட பலர் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/Solai_Arumugam6/status/1373858395518767106?s=19
administrator

Related Articles