மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேச்சல் தரை நிலத்தை மீட்டு தர கோரிய அறவழிப் போராட்டமானது இன்றுடன் 16 வது தினத்தை கடந்துள்ளது.
அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றம் காரணமாக கால்நடைகளுடைய மேய்ச்சல் தரை கவலிகரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களது மேய்ச்சல் தரைகளை மீளவும் தங்களிடம் ஒப்படைக்க கோரிய சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்க்கொண்டுவருகின்றனர்.
மேய்ச்சல் தரைகளை பல அரசியல்வாதிகள் தங்களுக்கு பல உத்தரவாதங்களை வழங்கி செல்கின்ற போதிலும் இன்றும் கூட மாதவன மயிலத்தமடு பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றமும் கணி துப்புரவு செய்யும் நிகழ்வுகளும் இடம் பெற்று வருவதாகவும் மாதவன மயிலத்தம்டு பகுதியில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெளியேறும் வரைக்கும் போராட்டத்தை கைவிட போவதாக இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
மழைக்கும் வெயிலுக்கும் மத்தியில் பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிய அறவழிப் போராட்டம் நடத்துவதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.