துப்பாக்கி சூட்டு பயிற்சியில் ஏற்பட்ட விபத்தில் கனேடிய இரானுவ சிப்பாய் மரணம்!

துப்பாக்கி சூட்டு பயிற்சியில் ஏற்பட்ட விபத்தில் கனேடிய இரானுவ சிப்பாய் மரணம்!

ஆல்பர்ட்டா மாகணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இரானுவ பயிற்சி முகாமில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பயிற்சியின் போது இடம்பெற்ற  விபத்தில் இரானுவ சிப்பாய் மரணமானார்.

இந்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வழமை போன்று இரானுவ வீரர்கள் துப்பாக்கி சூட்டு பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.அந்நேரம் தவறுதலாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இறந்தவர் பற்றிய விபரங்களை குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க கனேடிய இரானுவம் எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.

அத்துடன் இந்த மரணம் குறித்து கனேடிய இரானுவம் தங்களது கவலையை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து உள்ளக விசாரனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மரணம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் டூரூடோ தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

administrator

Related Articles