தென்னை மரத்தில் ஏறி உலக புகழ் பெற்ற இலங்கை இராஜாங்க அமைச்சர்

தென்னை மரத்தில் ஏறி உலக புகழ் பெற்ற இலங்கை இராஜாங்க அமைச்சர்

இலங்கையில்  தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பிடுங்கினால்  ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாவை உழைக்க முடியும்.

வேலையில்லை என்று சொல்ற சோம்பேறிகளுக்கு அதை உழைக்கும் விதத்தை மரம் ஏறி காட்டின இலங்கை தெங்கு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க  பெர்ணான்டோவை உலக ஊடகங்கள் பாரட்டியுள்ளன.

இன்று தனது வீட்டிலுள்ள  தென்மரத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மெசின் மூலமா மரம் ஏறிய அமைச்சர் மரத்தின் நடுவில் வைத்து ஊடகங்களுக்கு  ஸ்டைலாக நின்று  போஸ் கொடுத்து  பேசினார்.

இவரது இந்ந பேச்சு இன்று வைரலாகி உலகத்தின் பல ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது

இது இலங்கையர்களுக்கு பெருமை ஆனாலும் தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தும் இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் இந்த தைரியத்தை பாரட்ட வேண்டும்.

இன்று இலங்கையில் தேங்காய்க்கு கிராக்கி இருக்கிறது.ஆனால் மரம் ஏற தொழிலாளர்கள் பற்றாகுறை இருக்கிறது. குறைந்த விலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை பயன்படுத்தினால் நாளாந்தம் 10 ஆயிரம் ரூபா உழைக்கலாம் என்று அவர் சொன்னார்.

மேலும் தென்னை செய்கையை அதிகரிப்பதன் ஊடாக வெளிநாட்டு வருமானத்தை அதிகளவில் பெற முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

administrator

Related Articles