தென் ஆபிரிக்காவிற்கு தண்ணி காட்டிய இலங்கை அணி!!

தென் ஆபிரிக்காவிற்கு தண்ணி காட்டிய இலங்கை அணி!!

சொந்த மண்ணில் மட்டுமே சூப்பராக ஆடுவார்கள். என இலங்கை கிரிக்கெட் அணியை விமர்சித்த பலருக்கு வாயில் கொள்ளியை வைக்க…. இன்னைக்கு இலங்கை அணி ஆடுன ஆட்டம் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கு பெரிய தலைவலியை கொடுத்திட்டு ஏனெனில் முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸிறகாக 6 விக்கெட்டுகளை இழந்து 340 ஓட்டங்களை பெற்றது.

லங்கா பிரிமியர் லீக்கில் ஆடுன அதிரடி ஆட்டத்தை அப்படியே டெஸ்ட் போட்டிக்கு மாற்றி இலங்கை அணி விளையாடிய முறையை பாரட்டாமல் இருக்கவே முடியாது.

செஞ்சுரியன் ஆடுகளத்தில் ஒரு நாள் முழுவதும் பேட் செய்வதே ரொம்ப கஷ்டம். அந்த ஆடுகளம் வேக பந்து வீச்சாளர்களின் கோட்டை. அதில் நம்ம பசங்க செஞ்சது வேட்டை

செஞ்சுரியனில் இன்று ஆரம்பமான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்ளி பெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்தார்.

இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்ப மூன்று விக்கெட்டுகளையும் 54 ஓட்டங்களை பெற்ற போது இழந்தது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த தினேஸ் சந்திமால் மற்றும் தனஞ்செய டி சில்வா ஆகியோர் இணைந்து அணியின் ஓட்டங்களை வேகமாக குவிக்க ஆரம்பித்தனர்

அவர்கள் இருவரும் பகல் போஜன இடைவேளைக்கு பின்னர் தென் ஆபிரிக்க வீரர்களுக்கு தண்ணி காட்டி அடித்த விதம் அருமை.

என்ன செய்ய தீடிரென இலங்கை வீரரான தனஞ்செய ஒரு ஓட்டம் எடுக்க வேகமாக ஓடிய போது உபாதைக்குள்ளாகி களத்தில் இருந்து வெளியேறினார்.

அந்நேரம் அவர் 79 ஓட்டங்களை பெற்று இருந்தார். அந்நேரம் அணி பெற்ற ஓட்டம் 185 .

அதன் பிறகு ஆட வந்த திக்வெல்ல தனது பங்குக்கு சந்திமாலுடன் இணைந்து கவனமாக துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை 284 ஆக உயர்த்திய போது சந்திமால் தனக்கு வந்த பந்தை எதிர்கொள்ள நினைக்கும் போதே பந்து பேட்டில் பட்டு சிலிப்பில் இருந்து டூ பலஸிடம் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 85 ஓட்டங்களை பெற்றார்.

அவர் போன கொஞ்ச நேரத்திலே திக்வெல்ல LBW,முறையில் ஆட்டமிழந்தார்.அவர் அந்நேரம் 49 ஓட்டங்களை எடுத்து இருந்தார்.

இதன்பின்னர் ஆட வந்த தசுன் சானக்க தனது கன்னி டெஸ்ட் போட்டியில் வேகமாக ஆடி 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வேகபந்து வீச்சாளரான கசுன் ராஜித்த 7 வது விக்கெட்டுக்காக தசுனுடன் இணைந்து 20 ஓட்டங்களை பகிர்ந்து தொடர்ந்து ஆடி கொண்டு இருக்கிறார். தசுன் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களுடன் இருக்கிறார்.

பந்துவீச்சில் முல்டர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

https://youtu.be/aQa1sYtcQW0

administrator

Related Articles