தென் ஆபிரிக்க லெஜன்ட்ஸ் அபார வெற்றி

தென் ஆபிரிக்க லெஜன்ட்ஸ் அபார வெற்றி


இந்த ஆண்டுக்கான ரோட் சேப்ட்டி டுவன்ரி-20 போட்டித் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணியை வீழ்த்தி, தென் ஆபிரிக்க லெஜன்ட்ஸ் அணி வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்க லெஜன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் அப்டாப் அஹமட் 39 ஓட்டங்களையும், ஹனான் சர்கார் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் மகயா நிட்டினி மற்றும் தான்டி தஸான்பாலல்லா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க லெஜன்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கினை எட்டியது.

அன்ட்றூ புட்டிக் 82 ஓட்டங்களையும், மோர்ன் வேன் வைக் 69 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

administrator

Related Articles