தெல்தோட்டையில் வைத்தியர் உட்பட 7 பேருக்கு கொரோனா!!

தெல்தோட்டையில் வைத்தியர் உட்பட  7 பேருக்கு கொரோனா!!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வைத்தியர் ஒருவர் உட்பட ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (02) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றாளர்கள் கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

86 வயதுடைய ஆணொருவருக்கும், 53 வயதுடைய பெண்ணொருவருக்கும், இளைஞர்கள் இருவருக்கும், மூன்று சிறார்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெல்தோட்டை பகுதியில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 3 பிரதேசங்களில் உள்ள அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

தெல்தோட்டை வைத்தியசாலை வைத்தியரிடமும் கொரோனா தொற்றாளர் ஒருவர் சிகிச்சை பெற்றுள்ளார். நோயாளிக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து வைத்தியரிடம் தனிமைப்படுத்தப்பட்டார். இவர்களிடம் கடந்த 28 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

administrator

Related Articles