தேர்தலில் போட்டியிட போவதில்லை! மன்சூர் அலிகான் அதிரடி அறிவிப்பு! மனுவை இன்னும் வாபஸ் பெறவில்லை?

தேர்தலில் போட்டியிட போவதில்லை! மன்சூர் அலிகான் அதிரடி அறிவிப்பு! மனுவை இன்னும் வாபஸ் பெறவில்லை?

கோவை தொண்டமனுத்தூர்  தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், போட்டியிலிருந்து விலகுவதாக நேற்று மாலை அறிவித்தார்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் மனு தாக்கல் செய்த பின்னர், மக்கள் கூடும் பூங்காக்கள், மீன் மார்க்கெட், கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று
 வாக்கு சேகரித்து வந்தார்.

நேற்று காலை வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மாலையில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “நான் பணம் வாங்கிக்கொண்டு போட்டியிடுவதாக பலரும் பேசுகின்றனர். தேர்தலில் போட்டியிட்டு, மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பதற்குப் பதில், போட்டியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன். எனவே, வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளேன். இந்த முடிவு மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது” என்றார்.

ஆயினும் அவர் தாக்கல் செய்த மனு இன்னும் வாபஸ்பெறப்படவில்லை . இதனால் அவரது பெயர் பட்டியலில் தொடர்ந்து இருக்கும்.

சிலவேளைகளில் தேர்தலில் போட்டியிடுவேன் என அவர் அறிவித்தாலும் அறிவிக்கலாம்.

administrator

Related Articles