தொடரை வென்றது அவுஸ்திரேலியா, மெக்ஸ்வல் , கெரி அதிரடி ஆட்டம்!!

தொடரை வென்றது அவுஸ்திரேலியா, மெக்ஸ்வல் , கெரி அதிரடி ஆட்டம்!!

மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டார்களான கிளன் மெக்ஸவல் அலெக்ஸ் கேரி ஆகியோர் அதிரடி சதங்களை பெற்று அணியை வெற்றிக்கு கொண்டு சென்று தொடரை 2 -1 என்ற அடிப்படையில் வெற்றி பெற வைத்தனர்.

இதன்படி இங்கிலாந்து அணி தனது நாட்டில் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெற்ற ஒரு நாள் தோல்வி இது என்பது குறிப்பிடதக்கது.

வெற்றி இலக்கான 303 பெறும் நோக்கில் ஆடிய அவுஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 5 விக்கட்டுகளை இழந்து 73 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்நேரம் ஆடுகளம் நோக்கி வந்தார் கிளன் மெக்ஸ்வல் வாழ்வா சாவா.. வாடா மோதி பார்க்கலாம் என்ற ரீதியில்  விக்கட்காப்பாளரான கெரியோடு சேர்ந்து வந்த பந்துகளை பதம் பார்த்தார் . இதில் மெக்ஸவல்  7 சிக்ஸர்கள் அடித்தார். 90 பந்துகளை எதிர்த்து 108  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவர் இழந்த நேரம் 47. 3 ஓவர்கள்  முடிந்திருந்தது அணியின் ஓட்டமோ 285 மட்டுமே இன்னும் 18 ஓட்டங்கள் வேண்டும் அவுஸ்திரேலிய ரசிகர்கள் மனதில் கெரி தான் ஹீரோவாக இருந்தார். அவரும் 49 வது ஓவரின் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார் .அப்போது அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்களை பெற்று இருந்தது.

இறுதி ஓவரில் பத்து ஓட்டங்கள் தேவை இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளர் ரஷிட் பந்தை கையில் எடுத்தார். அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மிச்செல் ஸ்டார்க் பேட்டை சரிப்பார்த்தார். பந்து வந்த வேகத்தில் லோங்ஓன் நோக்கி ஓங்கி அடிக்க அது சிக்ஸர் எஞ்சிய நான்கு ஓட்டங்களை நான்காவது பந்தில் சுவீப் பவுண்டரி மூலமாக பெற்று அணியை வெற்றி பெற செய்தார்.

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை பெற்றது.
பெயர் ஸரோ 103 ஓட்டங்களை பெற்றார் .

administrator

Related Articles