தோட்டப்பகுதிகளில் காபட் பாதைகள் மீண்டும் புத்தெழுச்சி பெற்றுள்ளன பாராளுமன்றத்தில் ராமேஸ்வரன் உரை.

தோட்டப்பகுதிகளில் காபட் பாதைகள் மீண்டும் புத்தெழுச்சி பெற்றுள்ளன பாராளுமன்றத்தில் ராமேஸ்வரன் உரை.

தோட்டப்பகுதிகளில் காபட் பாதை என்பது கனவாகவே காணப்பட்டது ஆனால் தற்போது நிஜமாகவே மாறியுள்ளது அதற்கு காரணம் திடகாத்திரமான அரசாங்கம் அமைந்ததென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் வேண்டுகோளுக்கு இணங்க பெருந்தோட்டம் சார்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் காபட் பாதை இடம்பெற்றது.அதன்பிறகு நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்காக அவ்வேலைத்திட்டம் கைவிடப்பட்டது தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பெருந்தோட்ட பகுதிகளை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்ல வாய்ப்பு எற்பட்டுள்ளதாக உரையாற்றினார்.இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles