அரவிந்த, இலங்கையணிக்கு சொல்லும் ஆலோசனை

அரவிந்த, இலங்கையணிக்கு சொல்லும் ஆலோசனை

தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் தம்மிடம் ஆலோசனைகளை பெற தயங்குவதாக 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கையணியின் பிரதி தலைவராக செயற்பட்ட அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஹிரு வெப் டோக் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர் காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“1996 உலகக் கிண்ணத்தை வெல்ல அணிக்குள் காணப்பட்ட ஒற்றுமை மிக முக்கியமானது. அதேபோல் அணியில் இருந்த அனைவரும் தத்தமது கடமையை உணர்ந்து செய்தனர். உலக கிண்ணத்தை வெல்ல முடியும் என நாம் திடமாக நம்பினோம். 1996 ஆம் ஆண்டு காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்பிட முடியாது. எமது காலத்தில் ரோய் டயஸ், துலிப் மெண்டிஸ் அவர்களின் அனுபவங்களையும், நுணுக்கங்களையும் எமக்கு சொல்லி வழிநடத்தினார்கள். அவ்வாறே மஹேல,சங்கா ஆகியோரையும் எம்மால் வழிநடத்த முடிந்தது. தற்போதைய தோல்விகளில் இருந்து வீரர்கள் கற்றுக்கொண்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய வீரர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும். வனிந்து ஹசரங்க போன்ற திறமையானவர்கள் அணியில் உள்ளனர். மொத்தத்தில் திறமையானவர்களை இனம் காண பயப்பட கூடாது. என்றாலும் தற்போதைய நிலையில் இருந்து அணியை மீட்க முடியுமானாலும், அதற்கு நீண்ட காலம் செல்லும். தற்போதைய வீரர்களின் திறமையில் பிரச்சினையில்லை என்றாலும் இவர்களுக்கு ஒழுக்கம் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். அடிமட்டத்தில் இருந்து ஒரு திட்டத்தோடு செயற்பட்டால் எம்மால் சாதிக்க முடியம். விவ்வியன் ரிச்சட்சன், இம்ரான் கான், கவஸ்கார் போன்ற மூத்த வீரர்களின் ஆலோசனைகளை பயந்து பயந்து பெற்றுக் கொண்டோம். தற்போது சிலர் கேட்பர் பெரும்பாலானோர் தயங்குகின்றனர்’ என்றார்.

administrator

Related Articles