நடராஜன் ஆடிய ஆட்டம் அவுஸ்திரேலியா திண்டாட்டம்!

நடராஜன் ஆடிய ஆட்டம் அவுஸ்திரேலியா திண்டாட்டம்!

தனது கன்னி T20 போட்டியில் இந்தியா அணிக்காக விளையாடிய நடராஜன் வீசிய பந்துக்கள் அவுஸ்திரேலிய அணியை திண்டாட செய்தது.

முதல் போட்டியில் விளையாடினாலும் தனது IPL அனுபவத்தை அருமையாக காட்டினார்.கென்பராவில் இன்று நடைப்பெற்ற மூன்று போட்டிகளை கொண்ட T20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதில் ராகுல் 51 ஓட்டங்களையும் ஜடேஜா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

வெற்றி இலக்கான 162 ஓட்டங்களை இலகுவாக அவுஸ்திரேலிய அணி பெரும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தமிழக பந்து வீச்சாளரான நடராஜனும் சௌவாலும் இணைந்து அவுஸ்திரேலிய அணியின் வெற்றி பாதையை அப்படியே திருப்பி தோல்வியை நோக்கி கொண்டு சென்றார்கள்.

இதில் நடராஜன் தனது 4 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். சௌவால் திறமையாக வீசி 3 விக்கெட்குகளை 25. ஓட்டங்களை கொடுத்து கைப்பற்றினார்.

administrator

Related Articles