நடிகர் கார்த்திக்கு மூச்சு திணறல்!! வைத்தியசாலையில் அனுமதி!!

நடிகர் கார்த்திக்கு மூச்சு திணறல்!! வைத்தியசாலையில் அனுமதி!!

நடிகர் கார்த்திக் இன்று அவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்கள் அறிவுரையின்படி சில தினங்களாக ஓய்வில் இருப்பார் என உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

மேலும் கார்த்திக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது

தமிழ் சினிமாவில் 80,90-களில் பல வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகர் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானாலும், தனது நவரச நடிப்பால் விரைவிலேயே உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்த்தை எட்டினார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த முறை சட்டமன்ற தேரதலில் அ.தி மு கவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதாக அவர் அறிவித்த அடுத்த தினமே இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

administrator

Related Articles