“நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்” போன் மூலம் பொலிசை மிரட்டிய நபரை தேடி வலை வீச்சு!

“நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்” போன் மூலம் பொலிசை மிரட்டிய நபரை தேடி வலை வீச்சு!

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின்தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 10 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், “சென்னையில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடிக்கும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்” என மிரட்டி இணைப்பை துண்டித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்கு பிறகு, அங்கு குண்டுகள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து திருவான்மியூர் காவல் நிலைய போலீஸார், சைபர்கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

administrator

Related Articles