நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி

நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி

கேரளாவில் ராகுல் காந்தி கடலில் குளித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி, கடலில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன

கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக கூறினார். விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் உள்ளது.

ஆனால் மீனவர்களுக்கு அது இல்லை என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி , மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். அதன்பின்னர், ராகுல்காந்தி இன்று கொல்லத்தில் மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் பயணம் செய்து வலை வீசி மீன் பிடித்தார். அந்த மீன்களை படகில் வைத்து மீனவர்கள் சமைத்துக் கொடுத்தனர்.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென ராகுல் காந்தி சட்டென்று கடலில் குதித்து நீச்சலடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராகுல்காந்தி திடீரென்று கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

ராகுல் காந்தி மிகவும் எளிமையாக பழகினார் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

administrator

Related Articles