ஆற்றில் குளிக்க சென்ற 7 நண்பர்களை நீர் அடித்து சென்ற சோக சம்பவம்!!

ஆற்றில் குளிக்க சென்ற  7 நண்பர்களை நீர் அடித்து சென்ற சோக சம்பவம்!!

பென்னா நதியில் குளித்து கொண்டிருந்த 7 இளைஞர்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதியில் உள்ள கொரலகுண்டா பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எட்டுபேர் உல்லாச பயணமாக கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டைக்கு சென்றிருந்தனர். ராஜம்பேட்டை சமீபத்தில் உள்ள சித்தவட்டம் பகுதிக்கு சென்ற அவர்கள் அந்த பகுதி வழியாக ஓடும் பென்னா நதியில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.

சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பென்னா நதியில் தற்போது தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் நதியில் குளித்து கொண்டிருந்த 8 பேரையும் தண்ணீர் இழுத்து சென்றது. அவர்களில் சோம சேகர் என்ற இளைஞர் மட்டும் நீந்தி கரை சேர்ந்துவிட்டார்.

ஆனால் மற்றவர்களான ராஜேஷ் (19), சங்கரா(20), ஜெகதீஷ்(20),யாஷ் (22), சதீஷ் (20),நானி (20),தருண் (20) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று நீச்சல் வீரர்கள் துணையுடன் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் தற்போது 4 பேரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் அடித்து சென்ற மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

administrator

Related Articles