நத்தாரை வரவேற்க 14 ஆயிரம் LED லைட்டுகளால் தனது வீட்டை அலங்கரித்த இளைஞர்!! ( video)

நத்தாரை வரவேற்க  14 ஆயிரம் LED லைட்டுகளால் தனது வீட்டை அலங்கரித்த இளைஞர்!!   ( video)

ஆல்பர்ட்டா மாகணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்கரிப்பு வேலைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது

இதில் டிம் பவுஸர் ( Tim Fauser) என்ற இளைஞர் தமது கனவை நனவாக்கும் முகமாக வீட்டில் வருடந்தோறும் லைட்டுகளை கொண்டு அலங்கரிப்பார்.

சிறுவயதில் ஒரு லைட் வீடியோவை பார்த்ததில் இருந்து தாமும் இவ்வாறான அலங்கரிப்பை மேற்கொள்ள வேண்டும் என நினைத்தராம்.

அதற்கமைய கொஞ்சம் கொஞ்சமாக லைட்டுகளை சேமித்து வந்துள்ளார்.

பின்னர் அதனை இசையோடு காட்சியாக லைட்டுகளை செட் பண்ணியதாக அவர் கூறினார்.

இந்த வருடம் மொத்தமாக 14, 834 LED லைட்டுகள் வீட்டை அலங்கரித்துள்ளது.இதனை கண்டுகளிக்க நகரத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்த வன்னம் உள்ளனர்.

நீங்கள் கல்கரியில் வசிப்பவராக இருந்தால் உடனடியாக காரை எடுத்து குடும்பமாக போய் பாருங்கள்

தினந்தோறும் மாலை 4 : 30 முதல் 9 :30 வரை கண்டுகளிக்க முடியும். விலாசம் : 36 Auburn Meadows Green SE Calgary

நம்ம இலங்கையில் வெசாக் தோரணம் பார்த்தவர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்

கீழே உள்ள வீடியோ 2019 ஆண்டு எடுக்கப்பட்டது. புதிய வீடியோவை கிறிஸ்துமஸ் முடிந்த பிறகு போடுவோம். மக்களுக்கு சப்ரய்ஸ் வேண்டாமா..!!!!

administrator

Related Articles