நல்லூரில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை அங்கஜன் வாக்குமூலம்!!

நல்லூரில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கும்  எனக்கும் தொடர்பே இல்லை அங்கஜன்  வாக்குமூலம்!!

” யாழ் நல்லூரில் உண்ணாவிரதம் இருக்கும் கோஷ்டிக்கும் எனக்கும் தொடர்பும் சம்பந்தமும் இல்லை என பாரளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளமை யாழ் சிவில் சமூகத்திற்கு அதிர்ச்சியளித்துள்ளது.

தேர்தல் கூட்டுக்காகவே அவர்களோடு இணைந்தேன் தேர்தல் கூட்டு முடிந்ததும் அவர்களை மறந்தும் விட்டேன் கூட்டணி முடிந்ததும் விட்டது என அவர் இன்று அரியாலை கிழக்கு ஐயனார் கோவிலில் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த உண்மையை தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பதிலை கேட்டதும் ஊடகவியலாளர்கள் சிரித்துள்ளனர். என்ன இது தேர்தல் காலத்தில் என்றால் என்ன? என்று மீண்டும் கேட்டுள்ளனர்.

அதற்கு நிதானமாக பதிலளித்த அவர்.

நல்லூர் ஆலயத்திற்கு பின் வீதியில் போராட்டம் நடத்தி வரும் யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவரான அருண் சித்தார்த் என்பவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற காரணத்தினால் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அவர் தேர்தல் முடிந்த பின்னர் தற்போத யாழ் சிவில் சமூக நிலையத்தை தொடங்கி இருக்கிறார். அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை.

தேர்தலில் கூட்டு சேர்ந்ததற்காக அவர் எம்மோடு இணைந்து செயற்படுகிறார் என்று சொல்லவது தவறு. உதாரணமாக தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் என்னோடு இணைந்து சுதந்திர கட்சியில் இணைந்து போட்டியிட்டார்.

அதற்காக அவரது கொள்கையும் எனது கொள்கையும் ஒன்றாகுமா? அவரது கொள்கை வேறு எனது கொள்கை வேறு அதேபோன்றே இதுவும் தேர்தல் காலங்களில் பலரை தெரிவு செய்கிறோம் ஆனால் கடைசி வரை வருபவர்கள் சிலரே என அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார்.

இதேவேளை இவரது இந்த கருத்துக்கு யாழ் மக்கள் தகுந்த பதிலை அவருக்கு அளிப்பார்கள் என யாழ் சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.

administrator

Related Articles