நஹீர் அஹமட் வாங்கிய ஏச்சுக்கு அவர் நஞ்சருந்தி செத்திருக்க வேண்டும் – இராதா (வீடியோ)

நஹீர் அஹமட் வாங்கிய ஏச்சுக்கு அவர் நஞ்சருந்தி செத்திருக்க வேண்டும் – இராதா (வீடியோ)

20 ஆம் திருத்தத்தை ஆதரித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் நஹீர் அஹமட் வாங்கிய ஏச்சுக்கு அவர் நஞ்சருந்தியிருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதா கிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று (21) ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

(மலையக மக்கள் முன்னணியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளார். மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்புக்கு முன்னர் அவர் என்னுடன் கலந்துரையாடினார். 20 ஆம் திருத்தத்தை ஆதரித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் நஹீர் அஹமட் வாங்கிய ஏச்சுக்கு அவர் நஞ்சருந்தி இறந்திருக்க வேண்டும். 20 ரூபாவை காண்பித்து அவமானப்படுத்தினர் நாமும் அவமானப்படுத்தப்பட்டோம். அதாவது தெரிந்து துரோகம் செய்தவர்களிடம் நியாயம் கேட்க கூடாது எனவும் அவ்வாறு கேட்டால் அவர்கள் அதற்கு 1000 நியாயங்களை கூறுவார்கள் எனவும் ஹிட்லர் கூறியுள்ளார்.) என்றார்.

administrator

Related Articles