நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மதுரையை இரண்டாம் தலைநகராக்குவோம் – கமல்ஹாசன்

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மதுரையை இரண்டாம் தலைநகராக்குவோம் – கமல்ஹாசன்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18-ம் நாளை எட்டியிருக்கிறது.

இன்னும் ஆறு மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைவர் விஜயகாந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆண்டிபட்டியில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பேசிய பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடத் தயார் என்றும் தேமுதிக-அதிமுக கூட்டணியில் தொடரும் என்றும் பிரேமலதா கூறியிருந்தார்.

இன்று முதல் வருகிற 16-ஆம் தேதி வரை சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் மதுரை மற்றும் நெல்லை பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்கிறார். முதலில் அவனியாபுரம் மற்றும் பசுமலை பகுதிகளில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். பிறகு, கீழ வாசலில் பரப்புரை மேற்கொள்ளும் கமல்ஹாசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக மையத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து கருப்பாயூரணியில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மிக மோசமான சேதங்கள் ஏற்பட்டு, விவசாயிகள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஏதோ 3,758 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே பாதிப்பு எனக் குறைத்து மத்திய அரசிடம் நிதியுதவி கோரியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

administrator

Related Articles