நாவலப்பிட்டியில் ஹெரோயினுடன் 27 வயதான யுவதியும், பூசாரியும் சிக்கியனர் (படங்கள்)

நாவலப்பிட்டியில் ஹெரோயினுடன் 27 வயதான யுவதியும், பூசாரியும் சிக்கியனர் (படங்கள்)

நாவலப்பிட்டி நகரில் கோவில் ஒன்றை நடத்திச் செல்லும் போர்வையில் போதை பொருளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய சந்தேக நபரான பெண் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சமய கிரிகைகளை முன்னெடுத்தாக மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கைது செய்யப்படும் போது அவரின் கை பையில் இருந்து 140 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 67 வயதான பூசாரி கம்பளை பகுதியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நாளைய (14) தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles