மே.தீவுகள் 2 இன்னிங்ஸில் 31/1 வெற்றி இலக்கு 375 ! இலங்கை 2வது இன்னிங்ஸில் 476,நிஸாங்க 103, திக்வெல்ல 96

மே.தீவுகள் 2 இன்னிங்ஸில் 31/1 வெற்றி இலக்கு 375 !  இலங்கை 2வது இன்னிங்ஸில்  476,நிஸாங்க 103, திக்வெல்ல 96

சேர் விவியன் ரிச்செர்ட்ஸ் விளையாட்டரங்கில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி நாளைய தினத்தில் எஞ்சிய விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும்.

வெற்றி இலக்கான 375 ஓட்டங்களை பெறும் நோக்கில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை இரண்டாவது இன்யிங்ஸில் 1விக்கெட்டை இழந்து 34 ஓட்டங்களை பெற்று இருக்கிறது.

நாளைய ஐந்தாம் நாளன்று ஆடுகளமானது பந்து வீச்சாளர்களுக்கு அதிகளவு சாதகமாக இருக்கும் என விளையாட்டு விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஆயினும் அதி திறமை வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களை கொண்டுள்ள மே.தீவுகள் அணி நிதானமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 476 ஓட்டங்கள்

இன்றைய தினம் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி தனது 5 விக்கெட்டாக தனஞ்செய டி சில்வாவை முதல் ஓவரிலே இழந்தது.

ஆயினும் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பத்தும் நிஸாங்க நிரோஸன் திக்வெல்லையுடன் இணைந்து திறமையாக துடுப்பெடுத்தாடினார்.

அவர் தனது முநலாவது டெஸ்ட் போட்டியில் சதத்தை பூர்த்தி செய்துடன் 103 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்

அவரும் திக்வெல்லையும் இணைந்து 6 விக்கெட்ட இணைப்பாட்டமாக 179 ஓட்டங்களை பெற்றனர்.

இன்றைய தினம் தனது முதலாவது டெஸ்ட சதத்தை பூர்த்தி செய்வார் என திக்வெல்லையை எதிர்பார்த்த போதிலும் 96 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

இறுதியில் இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 375 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

ஸ்கோர் விபரம்

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 169 ஓட்டங்கள் , இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்கள் ( பத்தும் நிஸாங்க 103, நிரோசன் திக்வெல்ல 96, ஓசத பெர்ணான்டோ 91 திரிமானே 76 பந்துவீச்சில் ரோச் 74/3 கோர்னவோல் 137/3)

மே.தீவுகள அணி முதல் இன்னிங்ஸில் 271 இரண்டாவது இன்னிங்ஸில் இதுவரை 1 விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்கள்

நாளை இறுதி நாள்…..

administrator

Related Articles