நியாயமானபோராட்டத்தை தடுக்காதீர்கள்! இல்லையேல் போராட்டம் தலதா மாளிகைக்கு மாற்றமடையும்!! அருண் சித்தார்த்

நியாயமானபோராட்டத்தை தடுக்காதீர்கள்! இல்லையேல் போராட்டம் தலதா மாளிகைக்கு மாற்றமடையும்!! அருண் சித்தார்த்

யாழ் நல்லூரில் சாத்வீக உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு யாழ் சிவில் சமூக நிலையத்தின் போராட்டத்தை நிறுத்துமாறு யாழ்ப்பாண மாநகரசபை அறிவித்துள்ளது.

இதற்கான அறிவித்தல் கடிதத்தை யாழ் மாநகரசபை உறுப்பினரான வரதராஜன் பார்த்தீபன் அவர்கள் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று வாசித்துள்ளார்.

இதனையடுத்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் இருந்து வரும் யாழ் சிவில் சமூகத்தினர் மற்றும் காரணமால் ஆக்கப்பட்டோர் ஆத்திரமடைந்துள்ளனர்.

அந்நரம் யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவரான அருண் சித்தார்த்துக்கும் மாநகரசபை உறுப்பினருக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

இதுவரை யாழில் எத்தனையோ அமைப்புக்கள் போராட்டம் செய்த போது அமைதியாக இருந்த யாழ் மாநகர சபைக்கு தற்போது தான் கண் திறந்து இருப்பதாக அருண் சித்தார்த் கூறுகிறார்.

தமது போராட்டத்தை குழப்பினால் எமது போராட்டம் கண்டி தலதா மாளிகை முன்பாக இடம்பெறும். நாம் உண்மைக்காக போராடுகிறோம். தமிழ் மக்களை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு எமது போராட்டம் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அருண் சித்தார்த் மேலும் கூறினார்.

இதேவளை இன்று இரவும் சிலர் உண்ணாவிரத மேடை அருகாமையில் வந்து குழப்பம் விளைவித்தாகவும் அவர் சொன்னார்.

நீதியான முறையில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும்.  சர்வதேச ரீதியில் குற்ற விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற காரணங்களை முன்னிறுத்தி யாழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் அடையாள உணவு தவிப்பு போராட்டமொன்று நல்லூர் பின் வீதியில் நடத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.

administrator

Related Articles