நீட் தேர்விற்கு எதிராக …சூர்யா போர் ,அவருக்கு ஆதரவாக பலர் .. !! உதயநிதி விஜயம்..!!

நீட் தேர்விற்கு எதிராக …சூர்யா போர் ,அவருக்கு ஆதரவாக பலர் .. !! உதயநிதி விஜயம்..!!

சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற ‘நீட் தேர்வுக்கு’ எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம். – நடிகர் சூர்யா  கொதித்து எழும்பி இருக்கிறார்.

நீட் தேர்வு காரணமாக இதுவரை மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

இதனை கண்டிக்கும் முகமாக தற்போது அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு சினிமா பிரபலங்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக முன்னனி ஹீரோவான நடிகர் சூர்யா எப்போதுமே அநியாயத்தை கண்டால் கொதித்து எழும்புவார்.அதனை மேலும் உறுதி செய்யும் வகையில் நீட்டிற்கு எதிராக தனது கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டார்.

இவருக்கு ஆதரவாக வலைப்பேச்சு ஊடகவியலாளர் அந்தணன் தனது டூவிட்டரில்
சினிமா புகழை சுயநலத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் சிலருக்கு மத்தியில் சூர்யா கிரேட்!

வரவேண்டிய நேரத்தில் வருவதும், பேச வேண்டிய நேரத்தில் பேசுவதும்தான் சிறப்பு ” என்று புகழ்ந்துள்ளார்.

அத்துடன் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் பாரட்டியுள்ளார்.

உதயநிதி குரல்

பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தை பார்வையிட்ட நடிகரும் தி.மு.க இளைஞர் அணித்தலைவரும் தனது டூவிட்டர் பக்கத்தில்

நீட் அநீதியால் உயிரை மாய்த்த திருச்செங்கோடு மோதிலால் வீட்டுக்கு சென்று அவரின் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம். சர்வாதிகாரிகள்- அடிமைகள் துரோகத்தால் மகனை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறி கழகம் சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தோம்…

மாணவர்களே பொறுமை காப்போம். கழகத் தலைவர் ஸ்டாலின்  அவர்கள் தலைமையில் ’நீட்’டில்லா தமிழகம் விரைவில் அமையும்.  என கூறியுள்ளார்

administrator

Related Articles